வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய பொங்கல் விழா: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு (பட இணைப்பு)

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய பொங்கல் விழா நேற்று பிற்பகல் முதல் ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடம் பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடியவர்கள் பொங்கிப்படைத்து தமது நேர்த்திகளை வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். திங்கள் கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினர் ஹெலிகப்டரில் இருந்து பூ மழையாக வீசப்பட்டமை அடியவர்களை மிகவும் பரவசப்படுத்தியது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் மற்றும் புத்தளம் உடப்பு ஆகிய இடங்களில் இருந்தும் அடியவர்கள் வந்து பொங்கிப்படைத்து நேர்த்திகளை செய்தார்கள்.வுவனியா நலன்புரி நிலைத்தில் உள்ளமக்களும் தமது நேர்திகளை பக்திப்பரவசத்துடன் நிறைவேற்றியுள்ளனர். வட மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் இருநூற்றி ஜம்பதுக்கும் மேற்பட்ட பறவைக்காவடிகள் எடுத்துவரப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான காவடிகளும் எடுத்தவரப்பட்டன. இரவு 8.00 மணியளவில் அடியவர்களினால் ஆலய வாசலில் தீ மிதிப்பு இடம்பெற்றது. ஆலய சுற்றாடலில பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையி மற்றும் சுகாதாரத்திணைக்களத்தினாலும் சுகாதாரப் பணிகள் முன்னெடுகப்பட்டதுடன் பவுசர் மூலம் அடியவர்களுக்கு குடிநீh வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.