காத்தான்குடி மெத்தைப்பள்ளிக்குச் சொந்தமான மையவாடியில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த காட்டுத்தேங்காய் மரம் நேற்றிரவு சாய்ந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 122 வருட கால பழமைவாய்ந்தது என அறியப்படும் இக் காட்டுத்தேங்காய் மரமானது, மெத்தைப்பள்ளி வீதியோரமாகவே நின்றது.
ஆரம்பத்தில் மையவாடியுடன் இணைந்து பாதுகாப்பாக இருந்த இம்மரம், பின்னர் வீதி விஸ்தரிப்பு மற்றும் மரத்தின் வேர்களின்மீது வாகனங்கள் செல்லுதல் போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டு வந்தது.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen