கட்டாயம் பிளாஸ்டிக் கூடைகள்: மீண்டும் நடைமுறைக்கு வருகிறது!!

மரக்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்தின் போது கட்டாயம் பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்துவது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இந்நடவடிக்கையை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார். முதலில் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் இந்நடைமுறையினை பழக்கத்திற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் வர்த்தக நிலையங்கள் பலவற்றில் வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.