கனடா செந்தாமரை இதழ் நடத்திய கலையிரவு

கனடாவில் பதினெட்டு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மூத்த தமிழ்ப் பத்திரிகையான தமிழர் செந்தாமரை இவ்வாண்டுக்கான கலையிரவு நிகழ்வை அண்மையில் (26 மே 2012) வெகு சிறப்பாகக் கொண்டாடியது.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரபல பின்னணிப் பாடகி சின்னக்குயில் சித்ராவின் இனிமையான பாடல்களுடன் அரங்கேறிய இந்நிகழ்வு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆசிரியர் திருமதி இராஜி அரசரட்ணம், பிறேம் அரசரட்ணம் ஆகியோர் நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்திருந்தனர்.

கனேடிய இளம் தமிழ்ப் பாடகர்களுடன் உள்ளூர் இசைக் கலைஞர்களும் கலையிரவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.