யாழில் தமிழர் பாரம்பரியத்தின் மற்றுமொரு சான்றாக 'கூட்டத்தார் கோவில்' _

வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது.
லிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது.

அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நிகழ்ந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இடங்களை யாழ்ப்பாண அரசு காலத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிக் கூறும் கைலாயமாலை கூறுகிறது. யாழ்ப்பாண அரசுகால நிர்வாகத்தில் வலிகாமம் மிகப்பெரிய நிர்வாக மையமாக இருந்ததாகக் கூறும் வைபவமாலை இக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய இடங்களுக்குமான வணிக, போர்த் தொடர்புகள் வலிகாமத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் ஊடாக நடந்தாகக் கூறுகிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.