சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐந்து கத்தரிக் கன்றுகளை வீட்டுத் தோட்டத்தில் இவர் நட்டுள்ளார். இதுவரை இம்மரங்களில் சாதாரணமான காய்களே காய்த்துள்ளன. இங்குள்ள இரண்டு மரங்களில் மாத்திரம் வித்தியாசமான வடிவம் கொண்ட கத்தரிக்காய்கள் காய்க்கின்றன என இதன் உரிமையாளர் கூறுகின்றார். ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு காய் மாத்திரம் வித்தியாசமான வடிவம் கொண்டு காணப்பட்டுள்ளது.தற்போது இந்த இரு மரங்களிலும் பெருமளவான காய்கள் வித்தியாசமான வடிவம் கொண்டுள்ளன. ஒவ்வொரு காயும் வித்தியாசமான வடிவத்துடன் காணப்படுவதுடன் சாதாரண நிலையிலான காய்களும் இம்மரங்களில் உள்ளன. இதற்குக் காரணம் அறியாத இவர்கள் பயத்துக்காகவன்றி வித்தியாசமான வடிவ காய்களைப் பார்வையிட தினமும் பலர் வருவதனால் இவ்விரண்டு மரங்களிலும் காய்களைப் பறிப்பதை பெருமளவு தவிர்த்துள்ளனர். போக்குவரத்துக்கு மிகச் சிரமமான பகுதியாக இது இருக்கின்ற போதிலும் பெருமளவிலானோர் தினமும் இதைப் பார்வையிட வருகை தருவதாக இவர் கூறுகின்றார். ___ |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen