
சாமிமலை நகரத்துக்கு அருகிலுள்ள பெரிய சூரியகந்தைத் தோட்டத்தில் பிரதான பாதைக்கு அருகாமையிலுள்ள பெரிய மரம் ஒன்றில் மனித முகத்தைப்போன்ற உருவமொன்று தென்படுவது குறித்துப் பிரதேச மக்கள் ஆச்சரியடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குறித்த மரத்தில் மனித முகம் ஒன்று தெரிவதைக் கண்ட சிறுவனொருவன் இந்த விடயம் குறித்து தோட்ட மக்களிடம் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து இந்த மரத்தில் தென்படும் முகமானது அம்மனின் முகம் என்று கருதி அந்த முகத்திற்கு மஞ்சல் பூசி ,விபூதி அணிந்து வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச்சம்பவத்தினைக் கேள்விப்பட்ட அயல் தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தோட்டத்திற்கு வருகைத்தந்த வழிபாடுகளை மேற்கொள்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen