வாரம் ஒருபாடல்: காதல் கஷ்டமே...!

: 22 Jun 2012 திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடிய பாசுரம். நம்மாழ்வார் தம்மை பெண் பிள்ளையாகக் கருதிக் கொண்டு, அரங்கன் மீது காதல் கொண்ட தலைவியாக எண்ணி இந்தப் பாசுரத்தை மொழிகிறார். அரங்கன் மீது காதலுற்ற தலைவி, பிரிவுத் துயராலும், தலைவன் கண்ணன் காட்சி தராததாலும் அவன் மீதான காதல் கஷ்டத்தையே கொடுக்கிறது என்று புலம்புவதாய் தலைவியின் தாயார் அரங்கனிடம் முறையிடுகிறார். "என் மகள் விஷயத்தில் நீ என்னதான் சிந்தித்திருக்கின்றாய்...?' என்று அரங்கனிடம் கேள்வி கேட்கிறார்.

""இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்

எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்,

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்

கடல் வண்ணா கடியைகாண் என்னும்,

வட்டவாய் நேமி வலங்கையா என்னும்

வந்திடாய் என்றென்றே மயங்கும்,

சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்

இவள் திறத்து என் சிந்தித்தாயே''

""இந்தப் பெண் பிள்ளையானவள் சில நேரங்களிலே கையும் காலும் இட்டது இட்டபடியே இருக்க நின்றாள். மற்றும் சில நேரங்களிலே எழுந்து உலாவுகின்றாள். சில நேரங்களிலே மயங்கி அப்படியே நின்றாள். அப்படி மயங்கி நின்ற போதிலும் கைகூப்பி வேண்டுதலை தவிர்க்காதிருக்கின்றாள். பகவானின் விஷயத்திலே காதலைத் தாங்குவது வெகு கஷ்டம் என்று சொல்லி மூர்ச்சை அடைகின்றாள்.

"கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே' என்கிறாள். "வட்டமான விளிம்பையுடைய சக்கரத்தை வலக் கரத்தில் உடையவனே' என்கிறாள். நீ வாராய் வாராய் என்று பலவாறு அழைத்தும் கண்ணன் வரக் காணாது மயங்குகின்றாள். மிகவும் தூய்மையானவனே! நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளரும் அரங்கனே! இந்தப் பெண்பிள்ளை தொடர்பாக நீ சிந்தித்திருப்பதுதான் என்னவோதிருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடிய பாசுரம். நம்மாழ்வார் தம்மை பெண் பிள்ளையாகக் கருதிக் கொண்டு, அரங்கன் மீது காதல் கொண்ட தலைவியாக எண்ணி இந்தப் பாசுரத்தை மொழிகிறார். அரங்கன் மீது காதலுற்ற தலைவி, பிரிவுத் துயராலும், தலைவன் கண்ணன் காட்சி தராததாலும் அவன் மீதான காதல் கஷ்டத்தையே கொடுக்கிறது என்று புலம்புவதாய் தலைவியின் தாயார் அரங்கனிடம் முறையிடுகிறார். "என் மகள் விஷயத்தில் நீ என்னதான் சிந்தித்திருக்கின்றாய்...?' என்று அரங்கனிடம் கேள்வி கேட்கிறார்.
 ""இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
 எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்,
  கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
 கடல் வண்ணா கடியைகாண் என்னும்,
  வட்டவாய் நேமி வலங்கையா என்னும்
 வந்திடாய் என்றென்றே மயங்கும்,
  சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்
 இவள் திறத்து என் சிந்தித்தாயே''
 ""இந்தப் பெண் பிள்ளையானவள் சில நேரங்களிலே கையும் காலும் இட்டது இட்டபடியே இருக்க நின்றாள். மற்றும் சில நேரங்களிலே எழுந்து உலாவுகின்றாள். சில நேரங்களிலே மயங்கி அப்படியே நின்றாள். அப்படி மயங்கி நின்ற போதிலும் கைகூப்பி வேண்டுதலை தவிர்க்காதிருக்கின்றாள். பகவானின் விஷயத்திலே காதலைத் தாங்குவது வெகு கஷ்டம் என்று சொல்லி மூர்ச்சை அடைகின்றாள்.
 "கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே' என்கிறாள். "வட்டமான விளிம்பையுடைய சக்கரத்தை வலக் கரத்தில் உடையவனே' என்கிறாள். நீ வாராய் வாராய் என்று பலவாறு அழைத்தும் கண்ணன் வரக் காணாது மயங்குகின்றாள். மிகவும் தூய்மையானவனே! நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளரும் அரங்கனே! இந்தப் பெண்பிள்ளை தொடர்பாக நீ சிந்தித்திருப்பதுதான் என்னவோ?

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.