கொடியேற்றத்துடன் சித்திரைப் பெருவிழா துவங்கியது. முதல் நாள் காலை தர்மாதி பீடத்திலும், இரவு புன்னை மர வாகனத்திலும் பார்த்தசாரதி பெருமாள் வீதியுலா வந்தார்.தொடர்ந்து இரண்டாம் நாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத் திலும் வீதியுலா நடந்தது. இதையடுத்து, சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நாட்களில் ஒன்றான மூன்றாம் திருநாளான நேற்று அதிகாலை 6 மணியளவில், கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். நண்பகல் 12 மணியளவில் ஏகாந்த சேவையும் இரவில், அன்ன வாகனத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெற்றனதிருவல்லிக்கேணியில் கருட சேவை கோலாகலம்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen