மாரியம்மன் கோவிலில் பால்குட விழா கடந்த நான்காம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடந்தது. இதில், பெண் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.விழா ஏற்பாட்டை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமயில் உதவி ஆணையர் மற்றும் மேலாளர் ஞானசேகரன், மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் அசோகன், செயல் அலுவலர் அரவிந்தன், நகராட்சி கவுன்சிலர் மேத்தா, மாரியம்மன் கோவில் பஞ்., தலைவர் தனசேகர் ஆகியோர் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து நான்காம் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மேலும் 12.30 மணிக்கு அன்னதானம் இரண்டாம் பிரகாரத்தில் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா புறப்பாடும், ஏழாம் தேதி மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும் இரண்டு மணிக்கு ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen