திருமலைராயன்பட்டினம் விநாயகர் கோவில்களில் குடமுழுக்கு

காரைக்கால், ஜூன் 12: திருமலைராயன்பட்டினத்தில் 2 விநாயகர் கோவில்களுக்கு திங்கள்கிழமை குடமுழுக்கு செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரர் கோவிலைச் சேர்ந்த காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மண்டலீசுவர விநாயகர், மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நேய விநாயகர் கோவில்களுக்கு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை நான்கு கால பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது.

குடமுழுக்கு முடிந்து சுவாமிகளுக்கு கலசாபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை, ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.