மனமுருகி வணங்கினால் முக்தி

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி என்று சான்றோர்களால் கூறப்படுகிறது. அவ்வகையில் ஊத்துக்காடு ஈஸ்வரனை மனமுருகி வணங்கினாலே முக்தி கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.


கோயில் நகரமாக விளங்கும் காஞ்சியின் கிழக்குப் பகுதியில் சுமார் 15 மைல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வாலாஜாபாத்துக்கு செல்லும் சாலையில், வாலாஜாபாத்திலிருந்து சுமார் மூன்று கல் தொலைவில் உள்ளது ஊத்துக்காடு.


கல்வெட்டுகள்: சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு பல்லவ மன்னர்கள் தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை 18 கோட்டங்களாகப் பிரித்தனர். அவற்றில் ஊத்துக்காடும் ஒரு கோட்டமாக விளங்கியது.


இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பவர்மன் மன்னரால் கட்டப்பட்டது. இவைதவிர இக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் மூன்று பெரிய நந்தா விளக்குகளை அர்த்தசாமம் வரை ஒளிர வைத்தவர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் தானமாக வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.


கோயில் அமைப்பு: நந்தி மண்டபம், மஹா மண்டபம், அர்த்த மண்டபம், சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதியுடன் அமைந்துள்ளது இக்கோயில். மிகப்பெரிய விமானம் கொண்டு, கலை நுட்பங்களுடன், அழகிய தூண்களுடன், மணி மண்டபத்துடன் எழிலுடன் திகழ்ந்தது இக்கோயில். தற்போது காலத்தால் சிதிலமடைந்துள்ளது. திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.