![]()
கிறிஸ்மஸ் தீவை நோக்கி 180 அகதிகளுடன் செல்லும் படகு: விபத்தில் சிக்கலாமென அச்சம்
05.07.2012சுமார் 180 அகதிகளை ஏற்றிய மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படகு விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு மூன்று மீற்றர் உயரமுடைய அலைகளுக்கு மேல் பாய்ந்து செல்வதால் விபத்தில் சிக்கக்கூடும் என இந்தோனேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகு விபத்துக்குள்ளாகலாம் என படகில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் (இந்தோனேசிய நேரம்) தமக்கு அறிவித்துள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து படகு பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வணிகக் கப்பல் ஒன்றையும் விமானத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பலகையால் செய்யப்பட்ட அகதிகள் படகு விபத்து அபாயத்தை அடுத்து இந்தோனேசிய கடற்பக்கம் திரும்பியதாகவும் படகில் உள்ளவர்கள் இந்தோனேசியா செல்ல விருப்பம் கொள்ளாததால் படகு தற்போது கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen