![]()
சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 38 பயணிகள் காயம்
எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பேருந்து இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்ததில் 38 பயணிகள் காயமடைந்தனர்.
பாலத்தின் மீது பஸ் சென்று கொண்டிருந்த போது, வடபழனி செல்ல இடதுபுறமாக பேருந்தை சாரதி திருப்பியுள்ளார் . அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு பஸ் கீழே விழுந்தது.
பேருந்து மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இருந்தவர்கள் அலறித் துடித்துள்ளனர். பேருந்து மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
உடனடியாக அவர்கள் தீயணைப்பு மற்றும் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கு காயம் பலமாக இருந்தது.
காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen