நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில்...கார் விற்பனை 8.28 சதவீதம் வளர்ச்சி

ஜூலை 10,2012
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், உள்நாட்டில் கார்கள் விற்பனை, 1,55,763 ஆக உயர்ந்துள்ளது. இந்த விற்பனை, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,43,851 ஆக இருந்தது. ஆக, சென்ற ஜூன் மாதத்தில் கார்கள் விற்பனை 8.28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சில கார் உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் பிரச்னை ஏற்பட்டது. இதன் தாக்கம், நடப்பு ஜூன் மாத விற்பனையில் எதிரொலித்துள்ளது என, சியாம் அமைப்பின் மூத்த இயக்குனர் சுகாட்டோ சென் தெரிவித்தார்.
மாருதி சுசூகி:குறிப்பாக, கடந்த ஆண்டு, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்னையால், கார்கள் உற்பத்தி வெகுவாக குறைந்து போனது என்பது குறிப்பிடத்தக் கது.சென்ற ஜூன் மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 70,997 ஆக அதிகரித் துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 57,653 ஆக இருந்தது. ஆக, இந்நிறுவனம், கார்கள் விற்பனையில் 23.11 சதவீதம் வளர்ச்சி கண்டு முன்னணியில் உள்ளதுஇதே காலத்தில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 30,302லிருந்து, 30,363 ஆக சற்று அதிகரித்துள்ளது.அதேசமயம், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 26.6 சதவீதம் சரி வடைந்து, 18,522 என்ற எண்ணிக்கையிலிருந்து, 13,595 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
வட்டி விகிதம்:பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு போன்றவை, நிறுவனங்களின் வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில், வட்டி விகிதம் குறையும் நிலையில், நிறுவனங்களின் வாகன விற்பனை சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என, சியாம் அமைப்பின் தலைவர் எஸ். சண்டாலியா தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கார்கள் விற்பனை 1,38,095 ஆக குறைந்திருந்தது. அதன்பிறகு, தற்போது நடப்பாண்டு ஜூன்மாதத்தில் தான் கார்கள் விற்பனை இந்த அளவிற்கு குறைந்துள்ளது.மோட்டார் சைக்கிள் விற்பனை 6.58 சதவீதம் உயர்ந்து, 8,25,388லிருந்து, 8,79,713 ஆக அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனையில், முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள் விற்பனை, 4.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,66,501 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,89,505 ஆக அதிகரித்துள்ளது.
ஹோண்டா மோட்டார்:பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை,1.25 சதவீதம் உயர்ந்து, 2,08,883லிருந்து, 2,11,510 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும்,ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், வாகன விற்பனை61,435 என்ற எண்ணிக்கையிலிருந்து, 95,315 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 50,835 என்ற எண்ணிக்கையிலிருந்து, 44,375 ஆக குறைந்துள்ளதுஸ்கூட்டர்கள்:நாட்டின் ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனை 9.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10,71,161 என்ற எண்ணிக்கையிலிருந்து, 11,69,733 ஆக அதிகரித்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், ஸ்கூட்டர்கள் விற்பனை 2,24,224 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 1,82,324 ஆக இருந்தது.இதில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், ஸ்கூட்டர்கள் விற்பனை 76,310 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,20,893 ஆக மிகவும் அதிகரித்துள்ளது.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை, 32,924லிருந்து, 32,305 ஆக சற்றேகுறைந்துள்ளது. இதே போன்று, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனையும், 41,012 என்ற எண்ணிக்கையிலிருந்து, 37,694 ஆக சரிவடைந்துள்ளது.வர்த்தக பயன்பாட்டு வாகன விற்பனை, 4.71 சதவீதம் அதிகரித்து, 62,007லிருந்து, 64,926 ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தக வாகனங்கள்:பொருளாதார மந்த நிலையால், சென்ற ஜூன் மாதத்தில், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை பின்னடைவை கண்டுள்ளது என, சுகாட்டோ சென் மேலும் கூறினார்.மதிப்பீட்டு மாதத்தில், நடுத்தர மற்றும் கனரகவர்த்தக வாகனங்களின் விற்பனை, 27,668 என்ற எண்ணிக்கையிலிருந்து, 23,907 ஆக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை, 34,339லிருந்து, 41,019 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 40,549லிருந்து, 42,079 ஆக உயர்ந்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, 9.05 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13,62,495 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14,85,744 ஆக அதிகரித்துள்ளது என, சியாம் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.