கொடுமை செய்த கணவரை அடித்துக் கொன்று நாடகமாடிய மனைவி கைது

11.07.2012மதுரை:மதுரையில், சந்தேக "தீ'யால் சிகரெட்டால் சுட்டும், கையை கடித்தும் கொடுமைப்படுத்திய கணவரை, உருட்டு கட்டையால் அடித்துக் கொன்று, போதையில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.மதுரை பீபீகுளம் ஜீவா நகரை சேர்ந்தவர் கொத்தனார் அன்பழகன், 63. இவரது மனைவி உமாமகேஸ்வரி,45. மகன், மகள் உள்ளனர். மனைவி மீது அன்பழகன் சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டார். நேற்று முன் தினம் இரவும் கணவன், மனைவிக்கு தகராறு ஏற்பட்டதுஇந்நிலையில், வீட்டில் இருந்த அன்பழகன், போதையில் தவறி விழுந்து, தலையில் அடிப்பட்டு இறந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை முதல் அன்பழகன் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். அப்போது, அத்தெருவைச் சேர்ந்த ஒருவர், அன்பழகனை கொன்றுவிட்டு, உடலை தகனம் செய்ய ஏற்பாடு நடப்பதாக போலீசிற்கு தகவல் தெரிவித்தார்.தல்லாகுளம் உதவிகமிஷனர் தனபால், செல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், எஸ்.ஐ., மகேந்திரன் மற்றும் போலீசார் விசாரித்த போது, உமாமகேஸ்வரி முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் பரிசோதித்ததில், அன்பழகன் தலை, கழுத்தில் காயம் இருந்ததும், துண்டால் கழுத்து நெரிக்க பட்டிருந்ததும் தெரியவந்தது.உமாமகேஸ்வரி போலீசிடம் கூறியதாவது: தினமும் சந்தேகப்பட்டு என்னை அடிப்பார். நேற்று முன் தினம் இரவு சிகரெட்டால் வாய்ப்பகுதியில் சுட்டார். இடது கையை கடித்தார். இதனால் தான் உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றேன், என்றார். அவரை போலீசார் கைது செய்தனர். இக்கொலையில், வேறு யாருக்கும் தொடர்பு உண்டா, என விசாரணை நடக்கிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.