இலங்கை அணி ஆரம்பமே தடுமாற்றம்

09.07.2012பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
மூன்றாவது போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்மூலம், பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மொகமது ஹபிஸ் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெரராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அசார் அலி, யூனிஸ்கான் இருவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான தவ்பிக் உமர் 29 ஓட்டங்களில் ஆட்டமழந்தார்.
பின்பு களமிறங்கிய அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 40 ஓட்டங்களும், அதிபட்சமாக ஆசாத் ஷாபிக் 10 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து இலங்கை அணி 226 ஓட்டங்கள் இலக்குடன் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட தொடங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய தினேஷ் சண்திமால் 8 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய குமாரா சங்கக்காரா ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தனவும் 11 ஓட்டங்கள் எடுத்தநிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மற்றொரு தொடக்க வீரரான தரங்க பரணவிதா 13 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.