9 பிரிவுகளைக் கொண்ட இத் தோட்டத்தில் சுமார் 2000 தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலிலும் தேயிலை அரைக்கும் தொழிற் சாலைகளிலும் தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்தத் தோட்டத்திற்கு நீண்ட காலமாக உரம் போடாமல் இருப்பதாகத் தோட்டத் தலைவர் சுட்டிக் காட்டுவதுடன் இத் தோட்டத்தின் நிருவாகம் தோட்ட அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதில்லை என்பதனை சுட்டிக் காட்டினார்.
இதே வேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 தினங்கள் கட்டாயமாக வேலை கொடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் 20 தினங்கள் வரை வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. நேற்று முன் தினம் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்தை வழங்கிய பின் தோட்ட நிருவாகம் வாரத்தில் மூன்று நாட்களே (மாதத்தில் 15 நாட்கள்) வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தொழிலாளர்கள் பெரும் கவலைக்குள்ளாகி அதிக வாழ்க்கைச் செலவுகளைக் கவனத்தில் கொண்டு இதற்கு விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தங்களுக்கான கடந்த வருட போனஸும் இது வரை வழங்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen