, 16 July 2012
யாழ் மனோகரா தியேட்டரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அஜித் நடித பில்லா- 2 திரையிடப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது அஜித் ரசிகர்கள் கூடி ஆரவாரப் படுத்தினார்கள். அது அவர்கள் தமது ஹீரோவுக்கு தெரிவிக்கும் ஆதரவு.
மறுப்பதற்கில்லை. ஆனால் அதிலும் சிலர் பணத்தை வாரி இறைத்து வெடிகளை வாங்கிக் கொழுத்தினார்கள். வேறு சிலர் தேங்காய்களை கொண்டு வந்து அடித்து உடைத்தார்கள். கடவுளை வணங்குவதுபோல கற்பூரம் கொழுத்தினார்கள். இதற்கு எல்லாம் மேலபோய் பால் அபிஷேகம் வேற நடந்திருக்கண்ணா பாத்துங்களேன்.
வன்னியில் மக்கள், அவையங்களை இழந்து, அன்றாடம் ஒருவேளை சோற்றுக்கு அல்லலுறுகிறார்கள். வறுமையின் காரணத்தால் தற்கொலைசெய்கிறார்கள். ஆனால் அஜித்தின் உருவப்படத்துக்கு பாலை ஊற்றி, சம்பல் செய்ய உதவும் தேங்காயை நிலத்தில் அடித்து உடைத்து இவர்கள் அடிக்கும் ரவுசு தாங்க முடியவில்லை.
இவர்களை இப்படி ஒரு கலாச்சாரத்தில் வைத்திருக்கவே இலங்கை அரசு முயல்கிறது. இதனை இவர்கள் அறியவில்லை என்பதுதான் மனதை வருத்தும் செயலாக உள்ளது.

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen