இரண்டாம் உலகப் போரின் போது கடலில் மூழ்கிய விமானம் கண்டுபிடிப்பு

12-072012இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட Heinkel He – 115 என்ற விமானம் 70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரட்டை எஞ்சின் கொண்ட இந்த வகை விமானங்களை ஜேர்மனியிடமிருந்து நோர்வே வாங்கியது. கடந்த 1942ஆம் ஆண்டு ஒருநாள் கீழே இறங்கிய போது, கடலுக்கு அடியில் 120 அடி ஆழத்தில் மூழ்கிவிட்டது.

மூழ்கிய இந்த விமானத்தை நோர்வே கடலின் இடைகழியில் கடந்த 2005ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இதில் வெடிக்காத இரண்டு குண்டுகளும் இருந்தன. இவற்றை எடுத்து முதலில் செயழிக்க செய்தனர்.

நீரோட்டம் மற்றும் ஆக்ஸிஜன் வாயு குறைவாக இருந்த கடல்பகுதியில் இந்த விமானம் இருந்ததால், துருப்பிடித்து வீணாகவில்லை. உப்புப்படிந்து இருந்தாலும் புதிது போலவே இருந்தது.

இந்தப் பணிகளில் ஈடுபட்ட ஆலிவர் ஸ்காட், இந்த விமானத்தைப் பார்க்கும்போது நேற்று தொலைந்தது போலத் தோன்றுகிறது. நல்ல நிலையில் இருக்கின்றது. இதன் வால்பகுதியில் ஸ்வஸ்திக் சின்னம் பளிச் என்று தெரிகிறது என்றார்.

இந்த விமானத்தை மீட்ட பின்னர் ஸ்டாவென்கரில் உள்ள விமான அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வந்தனர். ஐந்தாகப் பிரித்து நல்ல தண்ணீர் தொட்டியில் அவற்றை மூழ்க வைத்தனர். இன்னும் இரண்டாண்டுகளுக்கு இந்த விமானத்தின் பகுதிகள் நல்ல தண்ணீரில் மூழ்கியபடி இருக்கும்.

இந்த ஸ்டாவென்கர் அருங்காட்சியகத்தில் அரிய விமானங்கள் பல உள்ளன. மெஸ்ஸெர்ச்மிட் BF – 109 G, இத்தாலியின் கேப்ரோனி வெடிகுண்டு வீச்சு விமானம், ஜேர்மனியின் ஏராடோ பயிற்சி விமானம் ஆகியவற்றின் ஹீக்கல் ரக விமானத்துக்கு மட்டுமே பொருத்தப்படும் BMW எந்திரம் போன்றவையும் இந்த அருங்காட்சியகத்தில் உண்டு.










0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.