![]()
பொது இடங்களில் புகைபிடிப்பதன் மூலம், 16 மடங்கு அதிகமாக மாசு: ஆய்வில் தகவல்
புவி வெப்பமடைதல் குறித்து சர்வதேச அளவில் விவாதித்து வரும் நிலையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பதன் மூலம் சுற்றுப்புறச்சூழ்நிலை, மற்ற மாசுபடுத்தும் காரணிகளைக் காட்டிலும் 16 மடங்கு அதிகமாக மாசடைவதாக தெரியவந்துள்ளது.
பாலிதின், பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப்பொருட்களை மண்ணில் கொட்டப்படுவதால் நிலம் மாசடைகிறது. நீர்நிலைகளை அசுத்தம் செய்வதன் மூலம், நீர்வளம் மாசடைகிறது. நீர், நிலம் உள்ளிட்ட வளங்கள் மாசடைவதைக் காட்டிலும், பொது இடங்களில் புகைபிடிப்பதன் மூலம், சுற்றுப்புறச் சூழ்நிலை 16 மடங்கு அதிகமாக மாசடைவதாக தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் ஒடாகா பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. வணிக மையம் ஒன்றில், 5 வாரகால அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடித்ததன் மூலம், அந்த இடத்தில் உயிருக்கு ஊறு விளைவிக்கும் பகுதிப்பொருட்கள் 70 சதவீதம் அதிகளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen