ஜி மெயிலால் முடியாதவை

12.07.2012

பலராலும் விரும்பி உபயோகிக்கப்படுகின்ற மின்னஞ்சல் சேவையாக ஜி மெயில் உள்ளது.

ஜிமெயிலில் 25MB வரை அளவுடைய கோப்புக்களை இணைத்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். ஆனால் ஒரு சில பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக ஜிமெயில் நிறுவனம் சில பைல் வகைகளைத் தன் மூலம் அனுப்புவதை அனுமதிப்பதில்லை (உ-ம் .exe). இந்த பைல் வகைகளை Zip செய்து அனுப்பினாலும் சரியாகக் கண்டறிந்து தடுத்து விடும்.

இவ்வாறு ஜி மெயிலில் அனுப்ப முடியாத பைல் வகைகள் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது குறைவு. ஜி மெயிலில் அனுப்ப முடியாத பைல் வகைகள் எவை என்பதனை இங்கு காணலாம்.
அவையாவன




இந்தப் பட்டியலில் உள்ள ஒரு சில பைல்வகைகளை File type Rename செய்து அனுப்பினால் ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். உதாரணமாக .exe என்பதை .jpg என்று மாற்றி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். அதை பழைய படி .exe மாற்றி விட்டால் போதும் அந்த மென்பொருளை உபயோகித்துக் கொள்ளலாம்.

ஆனால் எல்லாவற்றுக்கும் அது பொருந்தாது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.