கூகுளும் ஓரினச் சேர்க்கையாளர்களும்

12.07.2012இணைய ஜாம்பவானான கூகுள் புரட்சிகரமான பிரசாரத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தும் பொருட்டே இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இப் பிரசார நடவடிக்கைக்கு 'காதலை சட்டபூர்வமானதாக்கு' (Legalize Love) எனப் பெயரிட்டுள்ளது. உலகில் பலநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூகுள் தெரிவிக்கின்றது.

இப்பிரசார நடவடிக்கையானது ஜூலை 7ஆம் திகதி போலந்து மற்றும் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானதாகக் காணப்படுவதுடன், போலந்தில் ஓரினத்தம்பதிகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் இப்பிரசார நடவடிக்கைகளைப் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுக்கவுள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.