உடல் பருமன், ஆண், பெண் இருவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு அரக்கனாக மாறி வருகிறது. வயதுக்கு மீறிய உடல் பருமனால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தரமில்லாத உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை என்கிறார் சேத்துப்பட்டில் உள்ள ‘த பாடி ஃபோகஸ்‘சின் சத்துணவியல் நிபுணர் அம்பிகா சேகர்.
‘‘உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரை, ஹார்மோன் பிரச்சனைகள், தவறான உணவுப்பழக்கம், மனஉளைச்சல், நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உடற்பயிற்சியின்மை என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை.
உடல் பருமன் தானே பரவாயில்லை. ஆனால் என்னால் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்பவர்களுக்கு பல உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாவார்கள். நம் உடல் எடையை தாங்குவது கால்கள் தான். அதனால் ஓரளவு உடல் எடையை மட்டும் தான் தாங்கிக் கொள்ள முடியும்.
உடல் எடை அதிகமாகும் போது மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவை தவிர உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும், மாடிப்படி ஏறும் போது மூச்சுதிணறல், சர்க்கரை மற்றும் இருதய நோய்களின் பாதிப்பு 30 வயதிலேயே தாக்கும், பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் சினைப்பை பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்த பிரச்னைகள் நிரந்தரமாக தீர ஒரே வழி, முறையான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி. இதனை அனுபவமிக்க உணவு மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனை படி கடைப்பிடிக்க வேண்டும். காரணம் ஒருவரின் உடல் கூற்றுக்கு ஏற்ப அவர்களின் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முறைகள் மாறுபடும். உடல் பருமனை குறைத்து உடலைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டால், என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்‘‘ என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen