உலகின் மிக உயரமான பகுதிக்கு பேருந்து சேவை தொடக்கம்

25.07.2012உலகின் மிக உயரமான பகுதிக்கு சீனா பேருந்து போக்குவரத்தை தொடங்கி உள்ளது. பூமியின் கூரை என அழைக்கப்படும் திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள மிக உயரமான பகுதி என்காரி.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 மீற்றர் உயரத்தில் உள்ள என்காரி பகுதியில் குக்கிராமங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த பகுதிகளுக்கு தினமும் ஆறு பேருந்துகளை இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து சென்கி சாங்போ என்ற நகரிலிருந்து, மூன்று தடங்களில் என்காரிக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே திபெத் தலைநகர் லாசாவுக்கும், சென்கி சாங்போ நகருக்கும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பேருந்து போக்குவரத்துக்கு, உள்ளூர் வர்த்தகர்கள் மூலம் 2 கோடி ரூபாய் திரட்டப்பட்டு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வர்த்தகம் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.