கண்ணில் பந்து பட்டு காயத்திற்குள்ளானதால் ஓய்வு பெற்றார் பவுச்சர்

தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளரான மார்க் பவுச்சரின், கண்ணில் பந்து பட்டு காயத்திற்குள்ளானதால் சர்வதேச போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சமர்செட் அணிக்கெதிரான 2 நாள் ஆட்டத்தில் பங்கேற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சமர்செட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்தது. சமர்செட் அணி துடுப்பெடுத்தாடிய போது 46வது ஓவரில் ஜம்மால் உசேனுக்கு தென்னாபிரிக்க வீரர் இம்ரான்தாகீர் பந்துவீசினார்.

அந்த பந்தில் உசேன் ஆட்டமிழந்தார். அப்போது பெய்ல்ஸ் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் பவுச்சரின் கண்ணை தாக்கியதில் கண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது.

உடனடியாக களத்திலிருந்து பவுச்சர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆய்வு செய்த போது கண்ணின் வெள்ளை பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு பதிலாக டிவிலியர்ஸ் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்றார்.

மேலும், கடுமையாக அடிபட்டிருப்பதால் 150வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்த பவுச்சர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.