சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 18.5 சதவீதத்தால் அதிகரிப்பு

10.08.2012.
news
சிறிலங்காவுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 18.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கோடை விடுமுறையான மே மாதத்தை விடவும் இவ் ஆண்டு மே மாதம் வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 17.5 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலா தொடர்பான தரவுகள் அடிப்படையில் 57506 சுற்றுலாப் பயணிகள் மே மாதத்தில் வருகை தந்துள்ளதாகவும் மொத்தமாக முதல் 5 மாதங்களிலும் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் விகிதாசாரம் கடந்த ஆண்டை விடவும் 18.5 சதவீதத்தால் அதிகரித்து 387622 ஆகு ஆக அதிகரித்துள்ளது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆகக் கூடிய எண்ணிக்கையான பயணிகள் வழமைபோல் அண்டை நாடான இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் எனவும் இதனை அடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும்,

கடந்த ஆண்டு மொத்தமாக 8 இலட்சத்து 55 ஆயிரத்து 975 பேர் சிறிலங்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அதன் மூலம் கிடைக்கப் 830.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதோடு ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்களென எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.