1008.2012. |
யாழ். செம்மணியில் ஏ9 வீதியில் இருந்து
அகற்றப்பட்ட "யாழ்.வரவேற்கிறது" என்ற யாழ்.வளைவை மீண்டும் அதே இடத்தில் புதிதாக
நிறுவுவதற்கான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேசசபை மேற்கொண்டுள்ளது .
ஏற்கனவே இருந்த வளைவு ஏ9 வீதியின் அகலிப்புப்
பணிகளுக்காக இடித்து அகற்றப்பட்டது . இதன் பின்னர் அந்த இடத்தில் வீதி அகலிப்புப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டன . தற்போது அகலிப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை அடுத்து யாழ். வளைவை மீண்டும் அதே இடத்தில்
அமைப்பதற்கான நிதியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நல்லூர் பிரதேச சபைக்கு
வழங்கியுள்ளதாக சபையின் தலைவர் வி.வசந்தகுமார் தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த வளைவை அமைக்கும் நடவடிக்கைகள்
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வளைவின் புதிய வரைபடம் வீதி
அபிவிருத்தி அதிகாரசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி
கிடைத்ததும் கட்டடப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்
|
மீண்டும் அதே இடத்தில் வரவேற்கிறது யாழ்.வளைவு
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen