10.08.2012.
அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த சுமார் இருநூறு
பேருக்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைத் தாங்கிய படகொன்றை இந்தோனேசிய
கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் மீட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகில் வைத்து நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த படகில் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளடங்கலாக 211 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை இவ் ஆண்டு 108 படகுகளில் 7,364 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen