கட்டாயத் திருமணத்தால் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்

 வெள்ளிக்கிழமை10.08.2012.
சுவிட்சர்லாந்தில் வாழும் பெண்களில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 1400 பேர் கட்டாயத் திருமணம், கட்டாய விவாகரத்து, விவாகரத்து மறுப்பு போன்ற பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக நியுகேட்டல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இவ் ஆய்வை மத்திய புலனாய்வுத் துறைக்கான பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சட்டத்துறை அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா பெர்ன் நகரில் வெளியிட்டார்.
கட்டாயத் திருமணத்துக்குள்ளான 348 பெண்கள் பண்பாட்டு எதிர்பார்ப்பு மற்றும் குடும்ப வற்புறுத்தல் காரணமாகவே திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
384 பெண்களுக்குக் கணவரோடு வாழ விருப்பம் இருந்த போதும் வீட்டாரின் வற்புறுத்தலால் விவாகரத்துப் பெற்றுள்ளனர். 659 பெண்களுக்கு வாழப் பிடிக்காத சூழ்நிலையில் கணவருடன் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற குடும்பத்தார் வற்புறுத்தல்கள் பால்கன், துருக்கி, ஸ்ரீலங்கா நாடுகளைச் சேர்ந்த 18 - 25 வயதுப் பெண்களுக்கே ஏற்படுகின்றது. விவாகரத்து விரும்பியும் கிடைக்கப் பெறாதவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவராகவே இருக்கின்றனர்.
இப்பெண்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். கணவனை பொருளாதார ரீதியாக எதிர்பார்ப்பவர்கள் கணவனைப் பிரிந்தால் சுவிஸ்ஸில் வாழும் தகுதியை இழக்க நேரிடும் என்பதால் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.