இதற்கேற்ப அட்டன் கல்வி வலயத்தில் மணிக்கவத்தை தமிழ் வித்தியாலயம் , போடைஸ் தமிழ் வித்தியாலயம் ,இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயம் ,டிலரி தமிழ் வித்தியாலயம் ,பொய்ஸ்டன் தமிழ் வித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.இந்தப்பாடசாலைகளின் மின்சாரவசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் , மலசலக்கூட கட்டமைப்பினை மேம்படுத்தல் , குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் , பாடசாலை வளவைச்சுற்றி வேலிகள் அமைத்தல் ,படலை அமைத்தல் , வகுப்பறை கட்டிடங்களைப் புதுபித்தல் , நிறம் பூசுதல் , பாடசாலை வளவில் முன்மாதிரியான வீட்டுத்தோட்ங்களை ஏற்படுத்தல் ,விளையாட்டுப் பூங்கா அமைத்தல் , பாடசாலை பெயர் பலகையை நிறுவுதல் , முதலாம் தர மாணவர்களுக்கான செயற்பாட்டறை ஒன்றை ஏற்“படுத்தல் , ஆசிரியர் விடுதிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 5 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செயய்ப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்படுகின்ற இந்த நிதி பிரதேச செயலகங்களின் ஊடாக ஒவ்வொரு பாடசாலையினதும் பாடசாலை அபிவிருத்தி சபைக்கு வழங்கப்படவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைப் புனரமைக்கும் திட்டத்தில் முதற்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் , பிரதேச செயலக அதிகாரிகள் , கல்விப்பணிமனை அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் , பெற்றோர் ஆகியோரை இணைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen