பறந்த விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்த இரு இலங்கையர்கள் கைது!

 
 புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
குவைத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யுஎல் 230 என்ற வானூர்தியின் கழிப்பறையில் புகைபிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத்தில் இருந்து நேற்றிரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி வந்த வானூர்தியிலேயே இவர்கள் புகைபிடித்துள்ளனர்.
இதனையடுத்து வானூர்தியில் ஒருவகை எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த வானூர்தி சேவையாளர்கள் வானூர்தியில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.
இருந்தபோதும், கழிப்பறையில் இருந்து வெளியான புகையால் அந்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டமை கண்டறியப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இருவரிடமும் வானூர்தியில் புகைபிடிக்க கூடாதென வானூர்தி சேவையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்போது புகைபிடித்தவர்கள் வானூர்தி ஊழியர்களுடன் முறுகலில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் பிடித்து கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிடிப்பட்டவர்கள் கிரிமெட்டியான மற்றும் உடதெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.