இ.போ.ச பஸ்களில் ஊர்ப்பெயர்ப்பலகைகள் மும்மொழிகளிலும் பொறிக்கப்படவேண்டும்: வெல்கம

08.08.2012.
இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்வண்டிகள் அனைத்திலும் செல்லுமிடங்கள் திரும்பி வருமிடங்கள் யாவும் மும்மொழிகளிலும் பொறிக்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கண்டிப்பான பணிப்புரையை இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவர் சசி வெல்கவுக்கு விடுத்துள்ளார்.

இதனை அடுத்து இந்த நடைமுறையை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் சகல பிராந்திய பிரதம முகாமையாளர் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சகல டிப்போ முகாமையாளர்களுக்கும் இந்த விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதுடன் சிங்களம்,தமிழ,;ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிப்பதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பரீசீலிக்கப்பட்டு வருகின்றதாக காத்தான்குடி சாலை முகாமையாளர் ஏ.எல்.பழுளுல்லாஹ் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் செல்லும் ஊர் குறித்த பலகைகள் காணப்படாதவிடத்து குறித்த டிப்போ முகாமையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.