வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இரணைமடுக் குளத்தை நம்பி இம்முறை வயல் விதைத்த கமக்காரர்கள் இரணைமடுவில் நீர் வரட்சி காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொஞ்ச நீரோடு வற்றிக் கிடக்கும் வாய்க்கால்களில் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் வயல்களுக்கு இறைத்து கருகுவதில் இருந்து காப்பாற்ற கமக்காரர்கள் பெரும் பிரயத்தனப்பட்டு வருகின்றனர்.
எனினும் பலரது வயல்கள் கருகிப்போய்விட்டன. வரட்சி ஒரு புறமிருக்க சிறுபோக வயற்செய்கை தொடர்பான மாவட்ட அபிவிருத்திக் குழுவின் திட்டமிடல் இன்மையும் இந்த விவசாயிகளின் இன்னல்களுக்கு காரணமாகின்றது.
இம்முறை அரச ஈ.பி.டி.பி பா.உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சந்திரகுமார் தலைமையிலேயே சிறுபோக திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இரணைமடுவை பொறுத்தவரை சிறுபோகத்தை தீர்மானிக்கும்போது 59500 கன அடி கவனத்திற்கொள்ளப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 9500 கன அடி நீர் குளத்தின் பாதுகாப்பு மீன் வளங்கள் கால்நடைகள் என்பவற்றை கருத்தில் கொள்ளப்பட்டு 50000 கன அடி நீரே வயல்களுக்கானதாக அமைகின்றது.
இந்த கொள்ளளவில் 7964 ஏக்கர் விதைக்கலாம். ஆனால் அதையும் தாண்டி 8700 வரையான ஏக்கர்கள் விதைக்கப்பட அனுமதி வழங்க்கப்பட்டிருக்கிறது.
இதே இரணைமடுக் குளத்தின் நீர் உரிய முறையில் பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. குறித்த அளவு நீர் இரணைமடுவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தால் திறந்துவிடப்பட உத்தரவிடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
இயற்கை வரட்சி பற்றிய முன்னோக்கிய பாதுகாப்பு சிறுபோக வயல் விதைப்பு தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று விவசாயிகளை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
விவசாயத்தை முழுநேர தொழிலாக கொண்டவர்கள் மட்டுமல்ல பகுதி நேரமாக வயல் விதைப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களும் தலையில் கைவைத்து நிற்கின்றனர்.
அண்மையில் மழை வேண்டி கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் பெரும் யாகம் நடத்தபபட்டதும் அறிந்தசேதி.
இந்த இலட்சணங்களில் யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கல் திட்டம் ஒன்று அதிகாரிகளால் தூரநோக்கற்ற முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதும் நாடறிந்த சேதி.

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen