சுவிஸ்ஸில் தேசியத் திருநாள் கொண்டாட்டம்

 வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
சுவிட்சர்லாந்தில் ஒகஸ்ட் முதலாம் திகதி தேசியத்திருநாள் கொண்டாடப்பட்டது. வானம் தெளிவாகவும் வெப்பம் மிதமாகவும் இருந்ததால் திறந்தவெளி விருந்துகளும், வானவேடிக்கைகளும் விமரிசையாக நடைபெற்றன. அமைச்சர்கள் ஆங்காங்கே சிறப்புச் சொற்பொழிவாற்றினர். பலரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்காலத்தின் உறுதியற்ற தன்மை குறித்தும் தனது கவலையைத் தெரிவித்தனர்.
சுவிஸ் ஜனாதிபதி ஈவ்லின் விட்மர் ஷ்லும்ஃப் மற்றவருக்கு இடையூறு இல்லாமல் “அனைவரும் ஒரே திசையில் முன்னோக்கி நடைபோடுங்கள்” என்றார். ஐரோப்பாவில் அணைக்கட்டு உடைந்தால் சுவிட்சர்லாந்தும் அந்தத் தண்ணீரில் மூழ்குவது உறுதி என்றார்.
அவருடைய அமைச்சரவை சகாக்கள் இருவர் தேசியத் திருநாள் சிறப்புரையில் இருவேறு கருத்துகளை வலியுறுத்தினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் உயேலி மாரெர், சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் ஐரோப்பிய நிலை இன்னும் மோசமடையும் போது, செழிப்பான சுவிட்சர்லாந்திடம் அதிகமான கோரிக்கைகளை முன் வைக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளாவது ஐரோப்பாவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக்கூடாது என்றார்.
பெர்செட் மைய இடது சமூக சமதர்மக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், ஐரோப்பாவின் தலையெழுத்துதான் நமக்கும் என்று கூறிவிட்டார். இருவரும் இதே கருத்தை வெவ்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.