வெள்ளை நிறத்தில் பிறந்த காட்டெருமை குட்டிக்கு கோலாகல விழா

 
01.08.2012.வெள்ளை நிறத்தில் பிறந்த காட்டெருமை குட்டிக்கு கோலாகல விழா
அமெரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் கனெக்டிக்கட் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் காட்டெருமை ஒன்று சமீபத்தில் வெள்ளை நிறத்தில் குட்டியை போட்டது.
பொதுவாக கருப்பு நிறத்தில் காணப்படும் காட்டெருமைகள், வெள்ளை நிறத்தில் குட்டி போடுவது மிகவும் அரிது என்றும், ஒரு கோடி குட்டிகளில் ஒன்று இப்படி பிறக்கும் என்றும் கால்நடை துறை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
தங்கள் பகுதியில் வெள்ளைநிற காட்டெருமை குட்டி பிறந்திருப்பது அங்குள்ள விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பாண்டு வாத்தியம் முழங்க ஆடிப்பாடி விழா எடுத்து, இந்த குட்டிக்கு `எல்லோ மெடிசின் டான்சிங் பாய்' என செல்லப்பெயர் வைத்தனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.