புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி வரலாறு குறித்த ஒரு குறிப்புரை
ச.லலீசன், ஆசிரியர், ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி
சைவச் சூழலில் கல்வி வழங்கப் பெறுவதற்கான தேவை
ஈழத்தில் சைவக் கல்விப் பாரம்பரியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஐரோப்பியருடைய வருகையோடு ஈழத்தில் சைவச் சூழலில் கல்வி வழங்கும் முயற்சியில் பல சவால்கள் எதிர்நோக்கப்பட்டன. மி~னரிமாரின் நடவடிக்கைகளால் மதமாற்றமும் பண்பாட்டுத் தனித்துவ இழப்பும் இயல்பாயின. இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெரியார்க் சைவப்பாடசாலைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சைவச் சூழலில் கல்வியை வழங்கும் செயற்பாடுகள் 1842ஆம் ஆண்டில் ஆரம்பமாயின. வைத்திலிங்கச் செட்டியார், சிறாப்பர் குருநாத முதலியார், இரகுநாத முதலியார் ஆகிய பெரியோர்கள் ஒன்று சேர்ந்து சைவப் பாடசாலை ஒன்றை நிறுவினர். இதனைத் தொடர்ந்து நாவலர் பெருமான் 1848 இல் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை நிறுவினர். ஆயினும் சைவச் சூழலில் ஆங்கிலமொழி மூலக் கல்வியை வழங்கும் திட்டம் 1872 ஆண்டும் காலத்திலேயே செயலுருப்பெற்றது. இவ்வாண்டில் நாவலர் பெருமான் முதன் முதலாக சைவச்சூழலில் ஆங்கிலமொழிமூலமான (நுபெடiளா ஆநனரைஅ) கல்வியை வழங்கும் பாடசாலையொன்றை நிறுவினார்.
சைவபரிபாலன சபை, சைவவித்தியா விருத்திச் சங்கம் முதலிய நிறுவனங்கள் நாவலர் பெருமான் காட்டிய வழியில் கிராமங்கள் தோறும் பாடசாலைகளை நிறுவின. இந்த வழியைப் பின்தொடர்ந்து கிராமங்களில் வாழ்ந்த பெரியார்களும் தமது தனி முயற்சிகளாகப் பாடசாலைகளை நிறுவினர். கந்தரோடைக் கந்தையா உபாத்தியாயர் ஷஷகந்தரோடை ஆங்கிலக் கல்விக் கழகம்|| (இன்றைய ஸ்கந்தவரோதயக் கல்லூரி) என்ற பாடசாலையை 1894இலிலும், பாவலர் தெ. ஆ. துரையப்பாபிள்ளை ஷஷமகாஜன ஆங்கில உயர்தர பாடசாலை|| என்ற பெயருடன் தெல்லிப்பளையில் 1910இலும் பாடசாலைகளை நிறுவினர்.
இவர்களின் வழிகாட்டல்களை உள்வாங்கிய புத்தூர் மழவராயர் கந்தையா என்ற கொடைவள்ளல் 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி (சித்திரை மாத மிருகசீரிட நட்சத்திர நாளில்) ஸ்ரீ சோமஸ்கந்த ஆங்கி வித்தியாலயம், ஸ்ரீ சோமஸ்கந்தத் தமிழ் வித்தியாலயம் என்ற இரு பாடசாலைகளை ஒரே காணியில் நிறுவினர். இதுவே இன்றைய ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி ஆகும்.
அமரர் மழவராயர் கந்தையா
அமரர் மழவராயர் கந்தையா 10.09.1887 இல் புத்தூரில் பிறந்து 15.05.1936 வரை வாழ்ந்தவர். இவரது குடும்ப பின்புலம் பல தான, தருமங்களைச் செய்வதற்கு இடமளித்தது. தந்தையார் சி. மழவராயர் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரும் நிலப் பிரபுவாக விளங்கியவர். ஏக புதல்வனாக விளங்கிய ம. கந்தையா தந்தை, தாய் வழி முதுசொமாகக் கிடைத்த சொத்துக்களை தர்ம வழியில் அர்ப்பணிக்கத் துணிந்தார். இதன் நிமித்தம்,
புத்தூர்ச் சிவன் கோவில் என அழைக்கப் பெறுகின்ற விசாலாட்சி சமேத விசுநாதப் பெருமான் ஆலயத்தை அழகுற நிர்மாணம் செய்தமை
புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த ஆங்கில, தமிழ் பாடசாலைகளை அமைத்தமை.
நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனம் நிறுவப் பெறுவதற்காக காணி வழங்கியமை. என இவரது அறப்பணிகள் விரிந்தன.
இலவசக் கல்வியை வழங்கிய பெருமகன்
1931ஆம் ஆண்டிலேயே இலவசக் கல்வியை வழங்கும் முன்னோடியாக ம. கந்தையா விளங்கினார். சைவப் பிள்ளைகளின் கல்விக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற தூரநோக்கு அவரிடம் காணப்பட்டது. புத்தூரில் முதன்முதலாக நிறுவப்பெற்ற பாடசாலை புத்தூர் மெதடிஸ்த மிசன் பாடசாலை ஆகும். (சவுக்கடிப் பாடசாலை) இதைவிட இச்சூழலில் கோப்பாய் கிறிஸ்தவப் பாடசாலை, அச்சுவேலி கிறிஸ்தவப் பாடசாலை (இன்றைய அச்சுவேலி மத்திய கல்லூரி) என்ற வேற்றுச் சமயச் சூழலில் கல்வி வழங்கும் நிறுவனங்களே காணப்பட்டன. இந்த வகையில் காலத்தின் தேவையறிந்து பாடசாலையை நிறுவி இலவசக் கல்வியை வழங்கிய அமரர். மு. கந்தையாவின் பணி மகத்தானது. இதனை கௌரவிக்கும் வகையில் தற்போதும் கல்லூரியின் நிறுவுநர் நாள், பரிசளிப்பு விழா ஆகிய நிகழ்வுகள் செம்ரெம்பர் மாதம் 10ஆம் திகதியில் கொண்டாடப்படுவதே வழக்கமாகவுள்ளது.
பாடசாலை வளர்ச்சி
பாடசாலையின் முதலாவது அதிபர் என்ற பெருமைக்குரியவர் பிரம்மஸ்ரீ ஆர். சுந்தராச்சாரி (டீ.யு) என்ற இந்தியர் ஆவார். இவர் அந்நாளிலேயே 150 ரூபா சம்பளம் பெற்றுப் பணியாற்றினார் என அறிய முடிகிறது. ஏனைய ஆசிரியர்கள் தத்தமது தராதரத்திற்கேற்ப ரூபா 10 முதல் 20 வரை பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 05 ஆசிரியர்களும் ஏறத்தாழ 15 மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. இந்நிறுவனம் 1936 இல் உரிய முறையில் அரசில் பதிவு செய்யப்பட்டது.
1931 தொடக்கம் கல்லூரியின் அதிபர்களாகச் சேவையாற்றியோரை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது சாலப் பொருத்தமானது.
1931-1933 : பிரம்மஸ்ரீ சு. சுந்தராச்சாரி
1933-1936 : திரு. ஏ. கனகசபை
1936-1937 : திரு. ஊ.ஆ. கதிரேசம்பிள்ளை
1938-1944 : திரு. எஸ். தணிகாசலம்
1944-1948 : திரு. எஸ். வீரசிங்கம்
1949-1965 : திரு. சு. குமாரசுவாமி
1966-1970 : திரு. யு. மண்டலேஸ்வரன்
1970-1971 : திரு. என். மனோகரன்
1971-1976 : திரு. ளு.P. கனகசபாபதி
1976-1976 : திரு. N. ஆறுமுகதாசன்
1976-1977 : திரு. P. சச்சிதானந்தம்
1977-1981 : திரு. ளு. கனகராஜா
1981-1988 : திரு. ளு. சு. சண்முகரட்ணம்
1988-1990 : திரு. N. கணேசபிள்ளை
1990-1995 : திரு. வே. சுந்திரசேகரம்பிள்ளை
1995-2006 : திரு. வ. ஆறுமுகம்
இதேவேளை ஸ்ரீசோமஸ்கந்த தமிழ்ப் பாடசாலையின் அதிபர்களாக
1931-1948 : திரு. மு. மயிர்வாகனம்
1949-1953 : திரு. P. பொன்னம்பலம் ஆகியோர் சேவையாற்றியுள்ளனர்.
1936 இல் நிறுவுநரின் மறைவுக்குப் பின் தமிழ்ப்பாடசாலையை நடத்துவதில் பல சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 01.01.1939 இல் ஸ்ரீ சோமஸ்கந்தத் தமிழ்ப்பாடசாலை இந்துபோர்ட் (ர்iனெர டீழயசன ழக நுனரஉயவழைn) நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் 1950 இல் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அதிபர் அமரர். சு. குமாரசுவாமியின் காத்திரமான பங்களிப்பு இக்கல்லூரி வளர்ச்சியில் வடமராட்சியைச் சேர்ந்த அதிபர் அமரர் சு. குமாரசுவாமி அவர்கள் வழங்கிய காத்திரமான பங்களிப்புப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிதாகும். 17 வருடங்கள் கல்லூரியில் இரவு பகலாக வாழ்ந்த அவரது தலைத்துவத்தின் கீழ் கல்லூரி பல துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டது. 01.05.1953 தொடக்கம் ஆங்கில, தமிழ்ப் பாடசாலைகளெனச் செயற்பட்ட இரண்டு பாடசாலைகளையும் இணைத்து ஒரு பாடசாலையாக்கினார். இவரது காலத்திலேயே முதன்முறையாக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். 1957 இல் கல்லூரி முதற்தரக் கல்லூரி (ஐயுடீ) என்ற தகைமையைப் பெற்றது.
தர்மகர்த்தாக்கள்
1961இல் அரசுடைமையாக்கப்படும் வரை கல்லூரியை தர்மகர்த்தாக்களே நிர்வகித்தனர். அதிபர் நிர்வாகத் தலைவராகச் செயற்பட்டார். இந்த வகையில் நிறுவுநர் அமரர் ம. கந்தையாவின் மறைவுக்குப் பின் அமரர். ளு. தில்லைநாதர், அமரர். ளு. பொன்னம்பலம், அமரர் சான்டோ வு. முத்துப்பிள்ளை, திரு. தி. மாணிக்கவாசகர் என்பவர்கள் தர்மகர்த்தாக்களாகச் செயற்பட்டனர்.
வெள்ளிவிழா
கல்லூரியின் வரலாற்றில் 1956 ஆம் ஆண்டில் அதிபர் சு. குமாரசுவாமியின் தலைமையில் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது வெள்ளிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் பொன்விழா (50 ஆண்டுகள்) மணிவிழா (60 ஆண்டுகள்) முதலிய விழாக்கள் கொண்டாடப்படக் கூடிய கவின்நிலை பாடசாலையில் நிலவாமையால் அத்தகைய விழாக்கள் எவையும் கொண்டாடப்படவில்லை.
பவள விழா
கல்லூரியின் 75ஆவது அகவையைக் குறிக்கும் பவளவிழாக் கொண்டாட்டங்கள் கடந்த 21.01.2006 இல் சம்பிரதாய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. கல்லூரியின் பழைய மாணவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமாகிய பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம் பவளவிழா நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இரத்ததானம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
பவளவிழா ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் பழைய மாணவர் சங்கத்தின் கனடா, லண்டன், அவுஸ்திரேலியா கிளையினரின் பெரும் நிதிப் பங்களிப்புடனும் உள்@ர் அபிமானிகளின் பங்களிப்புடனும் குமாரசுவாமி மணிமண்டப அமைப்புப் பணி மேற்கொள்ளப்பெற்று வருகிறது. மேலும் ஸ்ரீ சோமஸ்கந்தருக்கெனத் தனியான ஆலயம் அமைத்தல், திருக்குறள் ஆய்வு மையம் அமைத்தல், திருவள்ளுவர் சிலை நிறுவுதல் எனப் பல்வேறுபட்ட பணிகள் தனிநபர் பங்களிப்புகளாக மேற்கொள்ளப்பெற்று வருகின்றன.
கல்லூரியின் தற்போதைய ஆளணியும் செயற்பாடுகளும் ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி யாழ். நகரப் பாடசாலைகளுக்கு ஒப்பான விதத்தில் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்று 1624 மாணவர்கள், 69 ஆசிரியர்கள், 13 கல்வி சாரா ஊழியர்கள் என எமது ஆளணி அமைந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டிலும் ஏறத்தாழ 15 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லல் (க.பொ.த. உஃத) 2004 பரீட்சையில் கலைப்பிரிவில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்று (மாவட்ட நிலை 02, தேசிய நிலை 07) மாணவியொருவர் இலங்கை ஜனாதிபதியால் பதக்கம் சூட்டிக் கௌரவிக்கப்பட்டமை)
எமது பிதேசத்தவர் அன்று முதல் இன்று வரை தனித்துவமாக வெற்றிவாகை சூடும் கரப்பந்தாட்டத்தில் (ஏழடடநல டீயடட) வடக்கு கிழக்கு மாவட்ட மட்ட சம்பியன்களாக வெற்றி பெற்று அண்மைக் காலமாக ஒவ்வோர் ஆண்டிலும் மாகாண மட்ட, இலங்கைத் தேசிய மட்ட இறுதிப் போட்டிகளில் போட்டியிடுதல் என்றவாறாக மாணவர் சாதனைகள் தொடர்கின்றன. இறுதியாக வெளியிடப்பட்ட க.பொ.த. சாஃத பரீட்சையில் பரீட்சைக்குத் தோற்றிய 96 பேரில் 48 மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை இதுகால வரையில் சாதிக்கப்படாத நிகழ்வாக விளங்குகிறது.க.பொ.த. உயர்தரம் 2006 பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்பெற்றன. இப்பெறுபேறுகளின் அடிப்படையில் கல்லூரி மாணவன் செல்வன். இரங்கநாதன் கோகுல்நாத் 2ஏ பி என்ற உயர்பெறுபேற்றைப் பெற்று மாவட்ட நிலையில் 21 ஆவதாகத் தேறி மருத்துவபீடத்திற்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இது மிக நீண்ட காலத்தின் பின் எய்தப்பெற்ற சாதனையாகக் கொள்ளப்படுகினிறது. இது தவிர கலைப்பிரிவில் 3ஏ பெறுபேறுகளை இருவரும் 2ஏ பி பெறுபேற்றை மூவரும் ஏ 2 பீ பெறுபேற்றை மூவரும் வழமை போன்று பெற்றுள்ளனர்.
மீண்டும் பலராலும் உற்று நோக்கப்பெறும் கவின்கலைக் கூடமாக மாறிவரும் ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி அன்னை பல வளங்களையும் பெற்றுப் பல்லாண்டு வாழ எல்லோரும் கூடி வாழ்த்துவோம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen