09.08.2012. |
வல்லை கடல் நீரேரியில் இருந்து பறக்கும் உப்புப் புழுதியால் விவசாயம் மற்றும் மக்களின் சுகாதாரம் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் அதனைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கரணவாய் வல்லுவம் பகுதியில் பொதுமக்கள் நேற்று முன்தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தை அடுத்து நெல்லியடிப் பொலிஸார் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்திருந்த கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவஸ்ரீ போராட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடி கோரிக் கைகளை விவரமாக சமர்ப்பிக்குமாறும் அந்தக் கோரிக்கை குறித்து யாழ். அரச அதிபருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதி அளித்தார். இதனையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை தற்போது நிலவும் கடும் வறட்சியால் வல்லை கடல் நீரேரி எந்தக் காலங்களிலும் இல்லாதவாறு வற்றிக்காய்ந்துவிட்டது. பெருமளவு உப்பும் விளைந்து காணப்படுகின்றது.
காய்ந்து போயுள்ள கடல் நீரேரிப் படுக்கையில் இருந்து கடந்த சில தினங்களாக உவர் புழுதி வானைத் தொடும் அளவுக்கு பறந்து, கடல் நீரேரிக்கு அருகில் உள்ள விவசாய நிலங்கள் வீடுகளில் படிகின்றது. இது மக்களின் சுவாத்தியத்துக்கும் சாதகமானது இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
உப்புப் புழுதிப் படுக்கைகள் காற்றுடன் கலந்து பறந்து விடுவதால் கரணவாய் தெற்கு, கரவெட்டி மேற்கு மத்தொனி ஆகிய பகுதிகளில் மரக்கறிச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வல்லை வெளிப்பகுதியும் உவர் புழுதி மூட்டத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொண்டமானாறு கதவுகளைத் திறந்து விட்டால் இங்குள்ள உவர் நீர் கடல் நீரேரிப் படுக்கையில் சங்க மிக்கும் போது உவர் புழுதி பறப்பது கட்டுப்படும் எனவும் நன்னீர்த் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருவதால் அது சாத்தியப்படாது என்றும் கருத்துக் கூறப்படுகிறது
|
உப்புப் புழுதியால் விவசாயநிலம் பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen