10.08.2012. |
கடந்த ஏழு மாதத்தில் தற்போது தான் வீட்டின் கட்டுமானப் பணியின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் அரசின் வீட்டுக்கடன் விதிமுறைகள் மாறியதே என்று டேவிட் டுல்க் கூறியுள்ளார். கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரொண்டோவில் வீடுகளின் கட்டுமான குறைவு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. வான்கூவரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் குறைந்த வட்டி விகிதமாகும். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புச் சந்தையில் வீழ்ச்சி காணப்படுகிறது. 123,000 வீடுகள் கட்டுவதற்கு பிப்ரவரியில் திட்டமிடப்பட்டது. இப்போது இது 7.6 சதவீதம் குறைந்துவிட்டது. இந்தப் புள்ளிவிபரம் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கானதாகும். தனி வீடுகளுக்கு 64,000 திட்டமிடப்பட்டதில், 4 சதவீதம் இப்போது குறைந்துவிட்டது. வீடு வாங்க விரும்புவோருக்கு கனடா அரசு பல சிக்கலான நிபந்தனைகளை விதிக்கின்றது. அமெரிக்காவில் வீட்டுக் கடனைத் தீர்க்க முடியாமல் மக்களும், அரசும் அவதிப்பட்டதனால் கனடா முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. கட்டுமானங்கள் அதிகரித்தாலும் விலை குறைவதாக இல்லை. விலை உயர்வை நேற்று கனடாவின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. டொரொண்டோ மற்றும் கேல்கரியில் 0.2 சதவீதம் விலை உயர்வு காணப்படுகிறது. மாதந்தோறும் ஏற்படும் விலை உயர்வில் இந்த 0.2 சதவீதம் 15வது விலை உயர்வாகும். கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதத்தை விட, 2012 யூன் மாதத்தில் வீட்டு விலை 2.3 சதவீதம் உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen