காந்திசிலை உடைப்பு! சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க வாதாடிய தமிழ் தேசியவாத சட்டத்தரணிகள்!

 
 புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
அரியாலை, காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் கை;கப்பட்டிருந்த இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது.
கடந்த ஜுலை 25ம் திகதி காந்தி சிலை உடைத்தாக குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி வழக்கு கடந்த 3ம் நாள் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததற்கு இணங்க இரு சந்தேக நபர்களும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காந்தி சிலை உடைப்பு சந்தேக நபர்களுக்கு சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என். ஸ்ரீகாந்தா, இ.த. விக்னராஜா, வி.ரி. சிவலிங்கம், மற்றும் மு.ரெமீடியஸ் ஆகியோர் மன்றில் ஆஜராகினார்.
தமது சமர்ப்பணத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மற்றைய குழுவினர் காந்தி சிலையை உடைத்து விட்டு, இவர்கள் இருவரின் மீதும் பொலிஸ் நிலையத்தில் பொய்யான முறைப்பாடு செய்துள்ளதாக மன்றில் தெரிவித்தனர் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தினை கருத்திற் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா இரு நபர்களையும் தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யதார்.
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.