வடமராட்சி, கரணவாய் மூத்தவிநாயகர் ஆலயத்தில் 50 லட்சம் பெறுமியான நகைகள், விக்கிரகங்கள் திருட்டு

 
 புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மூத்தவிநாயகர் ஆலயத்தில் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஐம்பொன்னினாலான விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்நாள் இரவு நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் 3பவுண் தங்கச்சங்கிலி, காப்புகள், அட்டியல் மற்றும் ஐம்பொன் விக்கிரகங்கள் என்பன இனந்தெரியாதவர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆலயத்தில் மிக அண்மையில் வருடாந்த உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.