06.09.2012.BYrajah.
மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சினைகள் எழுந்தன.
இந் நிலையில் 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி சாய்பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்தார்.
எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை.
எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.
தனது அறக்கட்டளையின் உறுப்பினர் இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, அருங்காட்சிசாலை, கோளரங்கம், இரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருகின்றது.
மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen