14.09.2012-By.Rajah. ஆகியோருக்கு றோட்டரிக் கழகம் உதவி போலியோவை முற்றாக ஒழித்ததாக பெருமிதம்
சர்வதேச றோட்டரிக் கழகத்தின் 2012-2013 நிர்வாக ஆண்டுக்கான தொனிப்பொருளான "சேவையின்
ஊடாகச் சமாதானம்" என்ற தலைப்பில் இலங்கை றோட்டறிக் கழகம் அண்மையில்
கருத்தரங்கொன்றினை நடாத்தியுள்ளது.
இலங்கை றோட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுநர் தர்சன் ஜோன் தலைமையில் யாழ்ப்பாணம்
ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு ஹற்றன் நஷனல்
வங்கியின் பிரதம் நிறைவேற்று அதிகாரி திரு. இராஜேந்திரா தியாகராஜா மற்றும்
புகழ்பூத்த வரி ஆலோசகர் N R கஜேந்திரன் ஆகியோர் வருகை உரையாளர்களாகக் கலந்து கொண்டு
உரையாற்றினர்.
ஆரம்ப நிகழ்வுகளில் மக்களுக்காக மரணித்தவர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி,
மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய வரவேற்பு நடனம் என்பன
குறிப்பிடும்படியாக அமைந்தன.
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப்
பணிப்பாளர் திரு. இராஜேந்திரா தியாகராஜா அவர்கள் “தனியார் துறையின் பார்வையில்
இன்றைய பொருளாதாரம்” எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன்போது இன்றைய
யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள்
பெரிதும் பங்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு யாழ்பாணத்தைச்சேர்ந்த மூளைசாலிகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி தலைநகரிலோ அல்லது வெளிநாடுகளிலோ வாழ்வதனை
விடுத்து தங்களின் சொந்த இடங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக
இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புகழ்பூத்த வரி ஆலோசகர் N R
கஜேந்திரன் “இன்றைய தலைமைத்துவம் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தலைப்பில்
உரையாற்றினார். தொடர்பாடல் மிகவும் பரந்துவிரிந்துவிட்ட இந்த காலகட்டத்தில்
தலைமைத்துவம் என்பது முன்னைய காலங்களைப்போல் இலகுவானதாக இல்லை எனவும் தலைமைகளின்
முடிவுகளை இன்றைய மக்கள் அலசி ஆராய்வார்கள் எனவும் அதற்கு ஏற்றவகையிலெயே சரியான
முடிவுகளை மட்டுமே மக்கள் ஏற்பார்கள் எனவும் தனது உரையிலே அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, உங்களுக்கு நன்மைபயக்காதபோதும் உண்மையாய் இருத்தல் என்பதே
சிறப்பானது என ஒரு குட்டிக்கதையிம் மூலம் விளங்கப்படுத்தினார்.
இலங்கை றோட்டரி மாவட்டம் 3220இனது ஆளுனர் றொட்டேரியன் தர்ஷன் ஜோன் அவர்கள்
தனது உரையில், இலங்கையில் ’போலியோ’ நோயினை முற்றாக இல்லாதுசெய்தது
றோட்டறிக்கழகத்தின் மிகப்பெரிய சாதனை என்பதையும் கடந்தகாலத்தில் றோட்டரிக்கழகம்
செய்த சாதனைகளையும் பட்டியலிட்டார். அத்துடன் இன்னமும் பல சேவைச்செயற்திட்டங்கள்
வடபகுதியில் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா
பயிற்சி நெறியினை வழங்குவதற்காக சுமார் நாற்பது லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட
நிதியை இலங்கை றோட்டறிக் கழகத்தின் கொழும்பு கிழக்கு கிளையின் தலைவர் ஜெறோம்
இராஜேந்திரா ஆறுதல் நிறுவன உத்தியோகத்தரிடம் காசோலையினையினைக்
கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது முல்லைத்தீவு, கிளிநொச்சி மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த 120
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா கற்கையினை வழங்குவதற்கும் , முன்பள்ளிகளுக்கான
தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கும் மற்றும் சங்கீத உபகரணங்கள், விளையாட்டுப்
பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகள் பிரிவிற்குத்
தேவையான புற்றுநோய் சிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா நங்க
நல்லூர், கொழும்பு கிழக்கு மற்றும் ஜோர்ஜியா யு.எஸ்.எ றோட்டறிக்கழகம் ஆகியன இணைந்து
சுமார் பத்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை றோட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில்
வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள், வங்கியாளர்கள்,
பல்கலைக்கழக சமூகத்தினர், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பல மட்டத்தினரும்
கலந்து கொண்டனர்.
| |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen