| 16.09.2012.By.Rajah.உலக
அளவில் ஒஸ்லோ, சூரிச், டோக்கியோ (Oslo, Zurich and Tokyo) ஆகிய மூன்று நகரங்களில்
வாழும் மக்கள் தாம் அன்றாட வாழ்க்கைக்கு அதிக செலவு செய்கின்றனர்.
நேற்று வெளிவந்த ஓர் ஆய்வறிக்கையின் படி சுவிட்சர்லாந்தின் பொருளாதார தலைநகரமாக
விளங்கும் சூரிச்சில் வாழும் மக்கள் அதிகமாக வாங்கும் திறன் பெற்றவர்களாக
இருக்கின்றனர். சுவிஸ் நாட்டின் UBS வங்கி நடத்திய இந்த ஆய்வில் 72 நகரங்களில் உள்ள 122 பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டனர். வாடகையை பொறுத்தவரை நியூயோர்க், ஹொங்காங் மற்றும் துபாய் (Newyork, Hong Kong and Dubai) ஆகியன முன்பு இருந்த தரவரிசை பட்டியல் இடத்திலிருந்து தற்போது இடம் மாறியுள்ளன. நியூயோர்க் 6ம் இடத்தையும் துபாய் 22ம் இடத்தையும், ஹொங்காங் 32ம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய நகரங்களான டெல்லியும் மும்பையும் மக்கள் குறைந்த செலவில் வாழ கூடிய நகரங்களாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்த இரண்டு நகரங்களிலும் மக்களின் சம்பளம் சூரிச்சோடு ஒப்பிடும் போது வெறும் 6சதவீதம் மட்டுமே. ஜெனிவா சம்பளம் கொடுப்பதில் கொபன்கேஹன் (Copenhagen) அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. வரி செலுத்திய பிறகு கிடைக்கும் சம்பளத்தில் லக்ஸ்சம்பேர்க் (Luxembourg) சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. ஒஸ்லோ (Oslo) நகரம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் 4வது இடம் வகிக்கின்றது. சூரிச் நகரத்தில் வாழும் ஒருவர் 22 மணி நேரம் வேலை பார்த்தால் ஒரு ஜ போன் (iphone) வாங்கிவிடலாம். ஆனால் மணிலாவில் உள்ள ஒருவர் இதே போல் கூடுதலாக 20 மடங்கு வேலை பார்த்தால் மட்டும் ஒரு iphone வாங்க முடியும் |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen