இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

15.09.2012.By.Rajah.இந்தோனேஷியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டங்கள் குலுங்கின. இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் இன்று கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் துறை 6.3 ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக தெரிவித்துள்ளது. பெங்குளு நகரத்தின் வடமேற்கிலிருந்து 190 கிலோ மீற்றர் தூரத்திலும், 25 மீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.
மென்ட்வாய் தீவுக்கு மிகஅருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இது வரை எந்த பாதிப்பும் தெரியப்படவில்லை

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.