| 04.09.2012.BY.rajah.உடலை
சிக்கென்று கச்சிதமாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து
சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உணவு உண்பது குறித்து பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனநல மருத்துவர்
எரிக் ராபின்சன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதன் முடிவு குறித்து ராபின்சன் கூறுகையில், சில பெண்கள் தனக்கு ஆண் நண்பன் கிடைத்ததும் தான் குண்டாகி விட்டதாக புகார் கூறுவதை கேட்கலாம். அதற்கு காரணம் அவர்கள் அடிக்கடி சேர்ந்து சாப்பிடுவது தான். காரணம் இவர்கள் அடுத்தவரின் உணவுப் பழக்கத்தை கொப்பியடிக்கின்றனர். இரு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் அவர்கள் ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதை குறைத்து, அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள்களை சாப்பிடத் தொடங்கி விடுகின்றனர். ஒரு அறையில் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவு வகைகளை தனியாகவும், சிப்ஸ் உள்ளிட்ட வறுக்கப்பட்ட உணவுகள், கிரீம் தடவிய கேக், மாமிச உணவுகள் ஆகியவை தனியாகவும் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 100 பெண்களை அந்த அறைக்குள் அனுப்பி தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுமாறு கூறப்பட்டது. பெரும்பாலானோர் அடுத்தவர் சாப்பிடுவதை பார்த்து அதையே எடுத்து சாப்பிட்டனர். சிலர் மற்றவர்கள் சாப்பிடச் சொன்னதையே அதிகமாக எடுத்து சாப்பிட்டனர். அது நமது உடலுக்கு சரிப்படுமா என்று அவர்கள் யோசிக்கவே இல்லை. அதே போன்று அவர்கள் சாதாரணமாக சாப்பிடுவதைவிட அதிகமாக சாப்பிட்டனர். எனவே அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், ஆரோக்கியமில்லாத உணவு வகைகளையும் சாப்பிடத் தூண்டுகிறது என்று தெரிவித்துள்ளார். |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen