19.09.2012.By.Rajah.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து
கொண்டிருக்கும் கியூரியாசிடி ரோவர் விண்கலம், அங்கு காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம்
பிடித்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் கியூரியாசிடி ரோவர் விண்கலம்,
கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. பத்து மாத பயணத்துக்கு பின், 56 கோடியே 30 லட்சம் கிலோ மீற்றர் தூரம் பயணித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது. பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில், பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் 13ஆம் திகதி காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. தற்போது நாசா மையம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen