ஜேம்ஸ் பாண்ட்டின் கார் ரூ. 2 கோடிக்கு ஏலம்

 திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012.By.Rajah.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுங்களுக்கு எப்பொழுதுமே தனி வரவேற்பு உண்டு. அந்தவகையில், முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானதன் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அந்த படங்களில் நடிகர்கள் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் 600 விஐபிக்கள் கலந்துகொண்டனர்.
குவாண்டம் ஆப் சோலஸ் என்ற படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க் பயன்படுத்திய ஆஸ்டன் மார்டின் கார் 3,86,000 டொலருக்கு (ரூ. 2.08 கோடி) ஏலம் போனது.
இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 1.5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போனதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.
கேசினோ ராயல் படத்தில் டேனியல் கிரெய்க் பயன்படுத்திய 2 நீச்சல் ஆடைகள் ரூ,37 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் ஜேம்ஸ்பாண்ட் படமான ''ஸ்கைபால்'' என்ற படத்தில் கிரெய்க் அணிந்த டைட்டானியம் கைக்கடிகாரம் ரூ,6.5 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போனது.
மொத்தம் 11 விதமான பொருட்களை ஏலம் விட்டதில் மொத்தம் 1.6 மில்லியன் டொலர் (ரூ. 6.24 கோடி) திரட்டப்பட்டது. இந்த பணம் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.