இஞ்சி டீ-யின் மருத்துவ குணங்கள்

 செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.
மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். கவலை நிவாரணி
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.
நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.
இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க, இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.