தவறான விலை விளம்பரத்தால் 600 வாணலிகளை இலவசமாக வழங்கிய பிரிட்டன் நிறுவனம்

 Wednesday03October2012.By.Rajah.இணைய தளத்தில், பொருளின் விலையை தவறாக வெளியிட்டதால், 600 வாணலிகளை இலவசமாக தந்துள்ளது பிரிட்டன் கம்பெனி.

பிரிட்டனில், குளுசெஸ்டர் பகுதியை சேர்ந்த சமையலறை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தங்கள் கம்பெனி தயாரித்துள்ள, வாணலியின் விலை 0.00 என குறிப்பிட்டிருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக 40,50 வாணலிகளை "புக்' செய்தனர்.
உடனடியாக வாணலிகளுக்கு ஆர்டர்கள் குவிவதை கண்ட இந்த கம்பெனி, விலையை 0.00 என குறிப்பிட்டுள்ள தவறை உணர்ந்தது. உண்மையில் இந்த வாணலியின் விலை 1,500 ரூபாய். இருப்பினும் வாடிக்கையாளர்களை ஏமாற்ற விரும்பாத, கம்பெனி நிர்வாகத்தினர், ஒரு வாணலி யை "புக்' செய்தவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்க முன்வந்தது. இப்படி 600 பேருக்கு, வாணலிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
"இந்த சம்பவத்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில், வாணலிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். எனவே தான், இந்த பிரச்னையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை' என, கம்பெனி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.